Sunday, February 19, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள். வீடியோ பாடல். - Thedipaar.com

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=12064

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் படையினர் இருவர் கைது. - Thedipaar.com

மாதவன் மாதிரி கணவன் வேண்டும் : பிபாஷா பாசு! - Thedipaar.com

காதலில் சொதப்புவது எப்படி’. - விமர்சனம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி. - Thedipaar.com

,சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் ஜோடி. - Thedipaar.com

சினிமா உலகில் எனக்கு இருக்கும் ஒரே பாய்பிரண்ட் பரத் மட்டும்தான்., சஞ்சனா - Thedipaar.com

பெப்சியின் வேலைநிறுத்தத்தால் பழைய படங்கள் டிஜிட்டலுக்கு மாறுகிறது. - Thedipaar.com

சமீரா ரெட்டியின் குத்துப்பாடல் வாய்ப்பை பறித்த மல்லிகா ஷெராவத். - Thedipaar.com

பாலிவுட் போல தமிழிலும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் நிறைய வரவேண்டும். அர்ஜூன் - Thedipaar.com

ஹீரோயினுடன் லிங்க்? லீகல் நோட்டீஸ் அனுப்புவேன். நடிகர் கோபம். - Thedipaar.com

பிரபல பாப் பாடகி விட்னி உடல் அடக்கம் : ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் - Thedipaar.com

துபாயைச் சேர்ந்த விமான பைலட்டை மணக்கிறார் நடிகை உதயதாரா. - Thedipaar.com

அஜீத்தின் பில்லா 2 இண்டநெட்டில் வெளியீடு? படக்குழுவினர் அதிர்ச்சி. - Thedipaar.com

,பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்க நயன்தாரா முடிவு - Thedipaar.com

,படங்களைக் குறைத்துவிட்டு திருமணத்திற்கு தயாராகும் தமன்னா. - Thedipaar.com

காங்கிரஸ் அல்லாத அரசுகள் மீது பிரதமர் குற்றச்சாட்டு - Thedipaar.com

சீனாவில் களிமண் கப்பல் மூழ்கி 11 பேர் பலி. - Thedipaar.com

,ரஷிய மசூதியில் உலகின் மிகப்பெரிய குரான் - Thedipaar.com

19.2.2012 முதல் 25.2.2012 வரை வார ராசி பலன்.


 
 24.02.12    ராசி பலன்கள்

19.2.2012 முதல் 25.2.2012 வரை
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் குரு; குடும்ப ஸ்தானத்தில் கேது; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்; சப்தம ஸ்தானத்தில் சனி(வ); அஷ்டம ஸ்தானத்தில் ராகு; ஜீவன  ஸ்தானத்தில் சந்திரன்; லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்; விரய ஸ்தானத்தில் சுக்கிரன்; 7-ல் சனி(வ). கணவன் - மனைவியரிடையே கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். தீய  நண்பர்களின் சேர்க்கையால் நஷ்டம் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி, உடல்நலனுக்கு அதிகம் செலவாகும். என்றாலும் குருவின் சுபப்பார்வை சனிக்கு ஏற்படுவதால் தீய  பலன்கள் குறையும்.  எந்தக் காரியமென்றாலும் அவசரப்பட்டு, முடிவெடுக்காமல் தீர யோசித்தபின்னர் செயல்படுவது நல்லது. சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல் லதே. உடல்நலன் சீராகும். அரசாங்கத்தின் உதவியும், பெரியோர் தொடர்பும் கிடைக்கும்.

உத்தியோகம் : உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உடன் உழைப்பவர்கள் ஒத்துழைப்பார்கள். எனினும் பொறுமையும், நிதானமும் தேவை.

தொழில் : தொழிலில் காணப்பட்ட முன்னேற்றம் தொடரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உற்பத்தி உயரும். வருமானம் பெருகும்.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் பெருகும். ஆயினும் உங்களுக்கு வந்து சேரவேண்டிய பணம் கிடைப்பது தாமதமாகும்.

கலைத்துறையினர் : நடிகர், நடிகையருக்கு நல்ல வாரம். புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வசதிகளும் கூடும்.

அரசியல்துறையினர் : அரசியல்வாதிகளுக்கு நல்ல வாரம். எனவே கட்சியில் செல்வாக்கு உயரும். பெயரும் புகழும் ஓங்கும். வருமானம் அதிகரிக்கும்.

மாணவமணிகள் : கிரகநிலைகள் சாதகமாக உள்ளதால் மனதில் தெளிவான சிந்தனைகள் நிலவும். அறிவுத்திறன் மேம்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். படிப்பில் நல்ல  ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும்.

விவசாயத்துறையினர் : பொறுப்புகள் கூடும். உழைப்பு கடினமாகவே இருக்கும். பாடுபட்டதற்கேற்ற பலன் இல்லாமல் போகலாம்.

பெண்மணிகள் : வருமானம் நல்லபடி இருந்துவரும். என்றாலும் செலவுகள் அதிகமாகவே இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை : கொடுக்கல் - வாங்கலில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியு மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக்காடரே.   

- திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 21, 25
பிரதிகூல தினங்கள் : பிப் : 22, 23, 24
அதிர்ஷ்ட எண்கள் : 4, 5
 
(கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி,மிருகசீரிஷம் 2-ம் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் கேது; சுக ஸ்தானத்தில் செவ்வாய்; ருண ஸ்தானத்தில் சனி(வ); சப்தம ஸ்தானத்தில் ராகு; பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்; ஜீவன ஸ்தானத்தில்  சூரியன், புதன்; லாப ஸ்தானத்தில் சுக்கிரன்; விரய ஸ்தானத்தில் குரு. இந்த வாரம் பணவரவு நல்லபடி இருந்துவரும். செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சிறிது சேமிக்க வும் முடியும். உற்றார், உறவினர் உறவுமுறை சுமுகமாக இராது. ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன் சேர்க்கை. வேலை, தொழிலில் விருத்தியும், வருமானப் பெருக்கமும்  ஏற்படும். பெண்களால் நன்மைகள் உண்டாகும். பொன், பொருள் சேரும். நினைத்த காரியம் நிறைவேறும்.

உத்தியோகம் : உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். எனினும் வேலைச்சுமை கூடும்.  பொறுப்புகள் அதிகரிக்கும்.

தொழில் : உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கலாம். எனினும் தொழில் வளர்ச்சியில் பாதிப்பிராது. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உற்பத்தி பெருகும். வருமானம் உயரும்.

வியாபாரம் : வியாபாரம் பெருகும். லாபம் உயரும். கொடுக்கல்-வாங்கல் சீராக இருக்கும்.

கலைத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாகச் சஞ்சரிப்பதால் திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நன்மை அடைவார்கள். திரைப்பட மற்றும் தொடருக்கான  வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும். வசதிகள் பெருகும்.

அரசியல்துறையினர் : நல்ல வாரம். கட்சியில் மதிப்பு உயரும். பொறுப்புள்ள பதவி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வருமானம் உயரும்.

மாணவமணிகள் : மனதில் தெளிவான நிலை நிலவும். அறிவுத்திறன் ஓங்கும். பாடங்களில் நல்ல ஈடுபாடு ஏற்படும்.

விவசாயத்துறையினர் : விளைச்சல் அமோகமாக இருக்கும். வருமானம் உயரும். இந்த வாரம் பூமி, நிலம், வீடு இவற்றால் ஆதாயங்கள் ஏற்படும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் திருப்தி தரும் விதத்தில் அமையும். எனவே வேண்டாத செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிறிது சேமிக்கவும் முயற்சி செய்யுங்கள்.  பழைய கடன்களையும் அடைத்து நிம்மதி காணலாம். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை : 1-ல் கேது; 7-ல் ராகு. எனவே பொறுமையும், நிதானமும் தேவை. சனி வக்கிரம் பெறுவதால் வேலைப் பளு அதிகரிக்கும்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.
     
- திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 21, 22
பிரதிகூல தினங்கள் : பிப் : 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள் : 6, 7
 
(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் வரை)
குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ); ருண ஸ்தானத்தில் ராகு; அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்; பாக்கிய ஸ்தானத்தில் சூரியன்,  புதன்; ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன்; லாப ஸ்தானத்தில் குரு; விரய ஸ்தானத்தில் கேது; பாக்கிய ஸ்தானத்தில் சூரியன். எடுக்கும் காரியங்கள் சிறிது தாமதப்படக்கூடும். சில ருக்கு இடமாற்றம், வீடு மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. எதிர்பாராத தொல்லைகளும் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சுலபமான வேலையைக்கூட கஷ்டப்பட்டு முடிக்க நேரிடலாம். வீண்பழியும் சிலருக்கு ஏற்படலாம். பகைவர் தொல்லை தருவர். பணம் பல வழிகளிலும்  விரயமாகக்கூடும். சனி வக்கிரம் பெற்றுள்ளது நல்லதே. நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

உத்தியோகம் : வேலையில் இடமாற்றம், பதவி மாற்றம் ஏற்படலாம். என்றாலும் இதனால் ஆதாயங்கள் ஏற்படும்.

தொழில் : தொழிலில் இதுவரை ஏற்பட்ட வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும். புதிய ஒப்பந்தங்களை இப்போது எதிர்பார்க்கலாம். தொழிலுக்குப் பொருளுதவிகள் கிடைக்கும்.  உற்பத்தி உயரும். வருமானமும் உயரும்.

வியாபாரம் : வியாபாரிகளுக்கு விற்பனை மேம்படும். லாபம் உயரும். கொடுக்கல்-வாங்கல் சீராகும். வரவேண்டிய பாக்கித் தொகையும் குறித்த காலத்தில் வந்து சேரும்.

கலைத்துறையினர் : பெரும் செலவுகள் ஏற்படலாம். அவை பெரும்பாலும் ஆடம்பரச் செலவுகளாக இருக்கலாம். எனவே செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.  வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : கட்சியில் மதிப்பும், மரியாதையும் ஓங்கும். உங்கள் நிலைமையும் மேம்படும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : மனதில் தெளிவும், நல்ல சிந்தனைகளும் நிலவும். எனவே படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

விவசாயத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் தொழில் மேம்படும். பயிர்கள் செழிக்கும். வருமானம் உயரும்.

பெண்மணிகள் : பணவரவு நல்லபடி நீடிக்கும். செலவுகள் அதிகமாகும். சுபச்செலவுகளும் ஏற்படலாம் அல்லது குழந்தைகளின் கல்விக்காகவும் ஏற்படலாம். எனவே  சிக்கனம் அவசியம். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை : குடும்பச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.

உணர்வார் ஆர்உன் பெருமை? ஊழி தோறு ஊழி
உணர்வார் ஆர்உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர்
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்?       

- பொய்கையாழ்வார்

அனுகூல தினங்கள் : பிப் : 22, 23, 24, 25
பிரதிகூல தினங்கள் : பிப் : 19, 20, 21
அதிர்ஷ்ட எண்கள் : 1, 9
 
(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்; சுக ஸ்தானத்தில் சனி(வ); பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு; சப்தம ஸ்தானத்தில் சந்திரன்; அஷ்டம ஸ்தானத்தில் சூரியன்,  புதன்; பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன்; ஜீவன ஸ்தானத்தில் குரு; லாப ஸ்தானத்தில் கேது. இந்த வாரம் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது அவசியம். வார்த்தை களில் கடுமையும், கண்டிப்பும் ஏற்படும். எனவே முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு, பேச்சில் இனிமை சேர்த்துக்கொள்ளுங்கள். அர்த்தாஷ்டமச் சனியும் நன்மை தராது.  எனவே எதைச் செய்தாலும் அவசரப்படாமல் பொறுமையுடன் சிந்தித்துச் செய்யுங்கள். சூரியன் அஷ்டமத்தில். மனைவி, மக்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  வேலை, தொழிலில் மற்றவர் தலையீட்டினால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல்நலனில் கவனம் தேவை.

உத்தியோகம் : சிலருக்கு வேலையில் இடமாற்றமோ, பதவி மாற்றமோ ஏற்படலாம். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

தொழில் : தொழில் வளர்ச்சி பாதிக்கப்படாது. ஜீவன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். எனினும் உற்பத்தி  உயரும். வருமானம் சீராக இருக்கும்.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும். வரவேண்டிய பணம் வருவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கொடுக்கல்-வாங்கல் சிரமம் தரும்.

கலைத்துறையினர் : வாய்ப்புகள் கிடைப்பது பல காரணங்களால் தள்ளிப் போகக்கூடும். வருமானம் பாதிக்கப்படும்.

அரசியல்துறையினர் : கட்சியில் ஏற்படும் உட்கட்சிப் பிரச்சினைகள் உங்களையும் பாதிக்கக்கூடும். வருமானமும் சற்று குறையலாம்.

மாணவமணிகள் : மனதில் குழப்பங்கள் விலகி நிம்மதி பிறக்கும். பாடுபட்டு உழைத்தால் படிப்பில் நல்ல பலனைக் காணமுடியும்.

விவசாயத்துறையினர் : பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்பு கடுமையாகும். வருமானம் சற்று குறையலாம்.

பெண்மணிகள் : வருமானம் திருப்தி தரும். செலவுகளும் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும். இதனால் கவலைகள் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண் மணிகளுக்கு மாற்றங்கள் ஏற்படும்.

அறிவுரை : சுப விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்கள் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். சொத்துப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர் உறையும்
கூடிய மாயன் தன்னைக் கண்ணனை நெடுமாலை கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே.
      
- நம்மாழ்வார்

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 24, 25
பிரதிகூல தினங்கள் : பிப் : 21, 22, 23
அதிர்ஷ்ட எண்கள் : 2, 4
 
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் செவ்வாய்; தைரிய ஸ்தானத்தில் சனி(வ); சுக ஸ்தானத்தில் ராகு; ருண ஸ்தானத்தில் சந்திரன்; சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்; அஷ்டம  ஸ்தானத்தில் சுக்கிரன்; பாக்கிய ஸ்தானத்தில் குரு; ஜீவன ஸ்தானத்தில் கேது; சப்தமத்தில் சூரியன். அலைச்சலும், ஆரோக்கியக்குறைவும் ஏற்படலாம். குடும்பச் செலவுகள்  அதிகரிக்கக்கூடும். சனி வக்கிரம் பெற்றுள்ளதால் அருகில் உள்ளவர்களாலும், உடன் பணி செய்பவர்களாலும் பிரச்சினைகள் ஏற்படலாம். என்றாலும் பெரிய பாதிப்பு ஏற்பட  வாய்ப்பில்லை.

உத்தியோகம் : வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். என்றாலும் அருகிலு ள்ளவர்களை அனுசரித்து செல்வது அவசியமாகும்.

தொழில் : கூட்டாளிகளுடனான பிரச்சினைகள் தீரும். இனி உங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்டமுடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உற்பத்தி  உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனை உயரும். லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் குறித்த காலத்தில் வந்து சேரும். கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையின்றி நடக்கும்.

கலைத்துறையினர் : திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிக, நடிகையர் நன்மைகள் அதிகம் பெறுவார்கள். புதுப்படங்கள் மற்றும் தொடர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  வருமானம் பெருகும். வசதிகள் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : அரசியல்வாதிகளுக்கு அதிகாரமிக்க பதவி கிடைக்கவும் சிறந்த வாய்ப்பு உள்ளது. பெயரும், புகழும் ஓங்கும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : மனதில் நிலவிய சஞ்சலங்கள் நீங்கி மனம் நிம்மதி பெறும். அறிவுத்திறன் அதிகரிக்கும். பாடங்களில் அதிக ஆர்வம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : பிரச்சினைகள் நல்லபடி தீரும். மனதில் நிம்மதி நிலவும். பயிர்கள் செழிக்கும். வருவாய் பெருகும்.

பெண்மணிகள் : குடும்பத்தில் பிரச்சினைகள் முழுவதுமாகத் தீரும். வருமானம் நல்லபடி இருப்பதால் செலவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வேலைக்குச்  செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை : உடன்பிறந்தவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

சொன்னால் விரோதம் இது. ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ;
என் நாவில் இன்கவியான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்;
தென்னா தெனா என்று வண்டுமுரல் திருவேங்கடத்து
என்னானை என் அப்பன் எம்பெருமான் உளன் ஆகவே.

- நம்மாழ்வார்

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 21, 22
பிரதிகூல தினங்கள் : பிப் : 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள் : 3, 6
 
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் சனி(வ); தைரிய ஸ்தானத்தில் ராகு; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்; ருண ஸ்தானத்தில் சூரியன், புதன்; சப்தம ஸ்தானத்தில் சுக்கிர ன்; அஷ்டம ஸ்தானத்தில் குரு; பாக்கிய ஸ்தானத்தில் கேது; விரய ஸ்தானத்தில் செவ்வாய். செலவுகள் அதிகமாகவே இருந்துவரும். என்றாலும் வரவும் அதிகரித்துவரும்.  எனவே செலவுகளைச் சுலபமாகச் சமாளித்து விடலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். எடுத்த காரியங்கள் இனி நிறைவேறும். உடன்பிறந்தவர் உறவு சுமுகமாக இருக்கும்.  உங்கள் உடல்நலனில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். சனி வக்கிரமடைந்திருப்பது நன்மையே. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். புதன் கும்பத்தில். நண்பர்கள்  உதவிக்கு வருவர். வியாபாரிகளுக்குக் கொடுக்கல்-வாங்கல் சீராகும். சுக்கிரன் மீன ராசியில் உச்சம். பணவரவு தாராளமாகும். 

உத்தியோகம் : அலுவலகத்தில் உங்கள் நிலைமை மேம்படும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பர். மேலதிகாரிகளும் ஆதரவு தருவர்.

தொழில் : தொழில் முன்னேற்றம் நீடிக்கும். தொழிலுக்குத் தேவைப்படும் நிதிஉதவிகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களை எதிர்பார்க்கலாம். உற்பத்தியும், வருமானமும் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் பெருகும். கொடுக்கல்-வாங்கல் சீராகும். உங்களுக்கு வரவேண்டிய பணம் குறித்த காலத்தில் வந்து சேரும்.

கலைத்துறையினர் : இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்கள் தீரும். திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் அதிக நன்மை அடைவார்கள். புதுப்பட மற்றும்  தொடரில் நடிக்க வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சியில் செல்வாக்கு ஓங்கும். வருமானம் அதிகரிக்கும்.

மாணவமணிகள் : மனதில் தெளிவான சிந்தனைகள் நிலவும். அறிவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : தொழில் சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கக்கூடும். என்றாலும் தொழில் பாதிக்கப்படாது. விளைச்சல் பெருகும். வருமானம் உயரும்.

பெண்மணிகள் : வருமானம் அதிகரிக்கும். என்றாலும் செலவுகள் பெருகும். எனவே சேமிக்க சாத்தியமிராது. வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு முன்னேற்றம்  ஏற்படும்.

அறிவுரை : உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

நெடியர்; சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிக் கொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய உதை கொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

- திருஞானசம்பந்தர்.

அனுகூல தினங்கள் : பிப் : 23, 24, 25
பிரதிகூல தினங்கள் : பிப் : 19, 20, 21, 22
அதிர்ஷ்ட எண்கள் : 7, 9
 
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் சனி(வ); குடும்ப ஸ்தானத்தில் ராகு; சுக ஸ்தானத்தில் சந்திரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; ருண ஸ்தானத்தில் சுக்கிரன்;  சப்தம ஸ்தானத்தில் குரு; அஷ்டம ஸ்தானத்தில் கேது; லாப ஸ்தானத்தில் செவ்வாய். குடும்பத்தில் கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும்.  செலவுகள் தொடர்ந்து அதிகமாகவே இருந்துவரும். பிள்ளைகளின் கல்வி மற்றும் உடல்நலனுக்காக அதிகம் செலவிடுவீர்கள். ஷென்மத்தில் சனி சஞ்சரிப்பதால் எந்தக்  காரியமென்றாலும் அவசரப்படக்கூடாது. பொறுமையுடன் சிந்தித்துச் செயல்படுங்கள். உங்கள் உடல்நலனிலும் அதிக அக்கறை செலுத்தவேண்டும். நண்பர்கள் விஜயத்தில்  எச்சரிக்கை தேவை. 5-ல் சூரியன். பகைவர்கள் தொல்லை அதிகரிக்கக்கூடும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் குறையும்.

உத்தியோகம் : பொறுப்புகள் கூடும். உழைப்பு அதிகரிக்கும். எனவே பணியிடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

தொழில் : தொழிலில் கூட்டாளிகளுடன் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உங்களை விட்டுப் பிரிய நேரிடும். என்றாலும் நண்பர்கள் உங்களுக்கு உதவ முன் வருவர்.  தொழில் மேம்படும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கக்கூடும். கொடுக்கல்-வாங்கல் சிரமம் தரும். வரவேண்டிய பாக்கித்தொகை வராமல் போகலாம்.

கலைத்துறையினர் : நடிக, நடிகையர் பொறுமை காக்கவேண்டும். உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தள்ளிப் போகும். வருமானம் பாதிக்கப்படும்.

அரசியல்துறையினர் : உட்கட்சி பிரச்சினைகளால் உங்கள் நிலைமை பாதிக்கப்படும். ஆதாயங்கள் குறையக்கூடும்.

மாணவமணிகள் : மனக் குழப்பங்களால் படிப்பில் கவனம் குறையும். எனவே, நேரத்தை வீணடிக்காமல் பாடங்களில் முழு கவனம் செலுத்துங்கள்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். வருமானம் பெருகும். மண், மனை ஆதாயம் தரும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் திருப்தி தரும். என்றபோதிலும் செலவுகள் சில சமயங்களில் வரவை மிஞ்சக்கூடும். எனவே கவலைகள் அதிகமாகும். வேலைக்குச்  சென்றுவரும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.

அறிவுரை : குடும்பத்தில் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். வீண்செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத்தீ யம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீ றாடுவதன் றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள் சூடித் திகழ் தருகண்டத்துள்ளே
நஞ்சடைந்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
  
- திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 21, 25
பிரதிகூல தினங்கள் : பிப் : 22, 23, 24
அதிர்ஷ்ட எண்கள் : 2, 5
 
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் ராகு; தைரிய ஸ்தானத்தில் சந்திரன்; சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன்; ருண ஸ்தானத்தில் குரு; சப்தம  ஸ்தானத்தில் கேது; ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய்; விரய ஸ்தானத்தில் சனி(வ). செலவுகள் அதிகரிக்கும் வாரம். உங்களது முயற்சிகள் வெற்றி பெறும். குருவின்  சுபப்பார்வை உங்கள் ராசிக்குக் குடும்ப ஸ்தானத்திற்கு ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்கல்-வாங்கல்  ஒழுங்காகும். அரசியல்வாதிகளுக்குப் பொறுப்புள்ள பதவி வந்து சேரும். சனி வக்கிரம் பெறுவதால் நன்மைகள் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றமும், வருமானப் பெருக்கமும் ஏற்படும்.

உத்தியோகம் : அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். உழைப்பு கடினமாகும். சிலருக்கு வேலையில் மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படும்.

தொழில் : தொழிலிலும் சிறுசிறு சிரமங்கள் ஏற்படலாம். என்றபோதிலும் தொழில் வளர்ச்சியில் எந்தப் பாதிப்புமிராது. உற்பத்தி உயரும். வருமானம் நன்றாக இருக்கும்.

வியாபாரம் : விற்பனையும், வருமானமும் சீராக இருக்கும். எனினும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தரும். வரவேண்டிய பாக்கித்தொகை வருவதில் சிக்கல்கள் ஏற்படும்.

கலைத்துறையினர் : திரைப்பட, நடிக, நடிகையருக்குப் புதுப்பட வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தாலே போதும். பணப்பற்றாக்குறை ஏற்படாது.

அரசியல்துறையினர் : அரசியல்வாதிகளுக்குப் பொறுப்புள்ள பதவி கிடைக்க வாய்ப்புகள் கைகூடிவரும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : மனதில் தெளிவான சிந்தனைகள் நிலவும். அறிவுத்திறன், ஞாபகசக்தி ஆகியவை அதிகரிக்கும். படிப்பில் நல்ல ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும்.

விவசாயத்துறையினர் : உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயிர்கள் செழிக்கும். வருமானம் பெருகும்.

பெண்மணிகள் : வருமானம் நல்லபடி நீடிக்கும். செலவுகள் அதிகரிக்கும். இதனால் கவலைகள் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

அறிவுரை : உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானை பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச் சித்திரு ஏகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.  

- திருஞானசம்பந்தர் 2-ம் திருமுறை

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 21, 25
பிரதிகூல தினங்கள் : பிப் : 22, 23, 24
அதிர்ஷ்ட எண்கள் : 1, 7
 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்; தைரிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; சுக ஸ்தானத்தில் சுக்கிரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு; ருண ஸ்தானத்தில் கேது;  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்; லாப ஸ்தானத்தில் சனி(வ); விரய ஸ்தானத்தில் ராகு. உங்கள் பணவரவு தாராளமாக இருக்கும். சனி வக்கிரம் பெற்றிருப்பதால் குடும்பத்தில்  மனைவி, மக்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். உங்கள் உடல்நிலையிலும் அக்கறை செலுத்தி வருவது அவசியம். வியாபாரத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்க ல்-வாங்கல் சிரமம் தரலாம். எனவே எதிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம். அரசியல்வாதிகளுக்கும் வரவேண்டிய பதவிகள் கிடைப்பதில் பல  காரணங்களால் சிக்கல்கள் ஏற்படலாம். சூரியன் தைரிய ஸ்தானத்திற்கு மாறியிருப்பது நல்லதே. எதிரிகள் விலகுவர். வேலை, தொழிலில் மாற்றங்களைச் சிலர் எதிர்கொள்ள  வேண்டியிருக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும்.

உத்தியோகம் : பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சனி வக்கிரமடைந்திருப்பதால் சிறு சிரமங்கள் ஏற்படும். சில மாற்றங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

தொழில் : தொழில் வளர்ச்சி நீடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உற்பத்தி உயரும். வருமானமும் பெருகும்.

வியாபாரம் : சனி வக்கிர நிலையில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படலாம். வரவேண்டிய பணமும் வருவது தாமதப்படும். எனினும் விற்பனையும்,  லாபமும் நன்றாக இருந்துவரும்.

கலைத்துறையினர் : சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் பொறுப்புள்ள பதவியொன்று கிடைக்க சாத்தியக்கூறு உள்ளது. பெயரும், புகழும் ஓங்கும்.

மாணவமணிகள் : மனதில் தெளிவான சிந்தனைகள் நிலவும். அறிவுத்திறன் அதிகரிக்கும். படிப்பில் நல்ல ஈடுபாடு ஏற்படும்.

விவசாயத்துறையினர் : விளைச்சல் அமோகமாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். மண், மனை ஆதாயம் தரும்.

பெண்மணிகள் : வருமானம் நல்லபடி நீடிக்கும். ஆகவே செலவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு மாற்றங்கள்  ஏற்படும்.

அறிவுரை : குடும்பத்தில் ஒற்றுமையோடிருங்கள். சனி வக்கிரமடைந்திருப்பதால் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

பரிகாரம் : தடங்கல்கள் நீங்கி, சகல காரியங்களும் நிறைவேற  கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

நிழலினார் மதிசூடிய நீள்சடை
அழலினாரண லேந்திய
கழலினாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்கில்லை துக்கமே.
 
- திருஞானசம்பந்தர் முதல் திருமுறை.

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 21, 22
பிரதிகூல தினங்கள் : பிப் : 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள் : 2, 4
 
(உத்திராடம் 2-ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் சந்திரன்; குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்; தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன்; சுக ஸ்தானத்தில் குரு; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது;  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்; ஜீவன ஸ்தானத்தில் சனி(வ); லாப ஸ்தானத்தில் ராகு. குடும்ப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பது நன்மை தராது. முன்கோபம் அதிகரிக்கும்.  பேசும் பேச்சுகளில் சூடு பறக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி, மக்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படக்கூடும். உடல்நலனில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வருவாய்  குறைந்து கடன் வாங்க நேரிடும். எட்டில் செவ்வாய். எதைச் செய்தாலும் பொறுமையுடன் சிந்தித்துச் செயல்படுங்கள். மனதில் இனம்புரியாத பயம் ஏற்படலாம். எதிர்பாராத  தொல்லைகள் ஏற்படலாம்.

உத்தியோகம் : பணியிடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மேலதிகாரிகள், நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

தொழில் : தொழில்துறையினருக்குச் சிரமங்கள் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. என்றபோதிலும் தொழில் வளர்ச்சி நீடிக்கும். உற்பத்தியும், வருமானமும் பெருகும்.

வியாபாரம் : விற்பனையில் சற்று தேக்கநிலை ஏற்படும். லாபமும் சற்று குறையக்கூடும். கொடுக்கல்-வாங்கலிலும், வரவேண்டிய பணம் வருவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.

கலைத்துறையினர் : திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களுக்குப் பொறுமை அவசியம். உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படக்கூடும். வருமானம் பாதிக்கப்படலாம்.

அரசியல்துறையினர் : கட்சியில் நிலவும் உட்கட்சிக் குழப்பங்கள் உங்களையும் பாதிக்கக்கூடும். எனவே வருமானமும் சற்று குறையும்.

மாணவமணிகள் : சற்று அக்கறையுடன் பாடுபட்டு உழைத்துப் படித்தால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

விவசாயத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமற்று சஞ்சரிப்பதால் தொழிலில் காணப்பட்ட மந்தநிலை தொடரக்கூடும். உங்களது வருமானம் குறையக்கூடும்.

பெண்மணிகள் : வருமானம் நல்லபடி நீடிக்கும். குடும்பத்திற்கான செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு சிரமங்கள் தோன்றக்கூடும்.

அறிவுரை : உங்கள் உடல்நலனில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்நகரும் - நான்கு இடத்தும்
நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்.

- பொய்கையாழ்வார்

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 21
பிரதிகூல தினங்கள் : பிப் : 22, 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள் : 1, 6
 
(அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் சூரியன், புதன்; குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன்; தைரிய ஸ்தானத்தில் குரு; சுக ஸ்தானத்தில் கேது; சப்தம ஸ்தானத்தில் செவ்வாய்; பாக்கிய  ஸ்தானத்தில் சனி(வ); ஜீவன ஸ்தானத்தில் ராகு; விரய ஸ்தானத்தில் சந்திரன். சனி வக்கிரமடைந்திருப்பதால் வியாபாரிகள் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கையோடிருக்க  வேண்டும். உங்கள் உடல்நலனிலும் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். எனினும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீட்டிற்குத் தேவைப்படும் விலையுயர்ந்த ஆடம்பரப்  பொருட்கள் வாங்குவதில் பணம் விரயமாகும். உற்றார், உறவுமுறை சீராகும். சூரியன் ஷென்ம ராசிக்கு மாறியுள்ளார். உஷ்ண சம்பந்தமான சிறுசிறு உடல் உபாதைகள்  ஏற்படக்கூடும். பயணங்களால் அலைச்சலும், உடல் சோர்வும் ஏற்படும். எடுக்கும் காரியங்களை முடிக்க அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.

உத்தியோகம் : பணியிடத்தில் சிரமங்கள் தொடரக்கூடும். மேலதிகாரிகள், நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.

தொழில் : தொழிலதிபர்களுக்கும் பிரச்சினைகள் தோன்றும். என்றபோதிலும் தொழிலுக்கு பாதிப்பிராது. உற்பத்தி உயரும். பணவரவு பெருகும்.

வியாபாரம் : கொடுக்கல்-வாங்கல் சிரமம் தரும். உங்களுக்கு வந்து சேரவேண்டிய பணம் வருவது தாமதப்படும். என்றாலும் விற்பனையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பி ல்லை. வருமானம் பாதிக்கப்படும்.

கலைத்துறையினர் : திரைப்பட கலைஞர்கள் அதிக ஆதாயமடைவார்கள். நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும். வருவாய் உயரும். வசதிகள் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : கட்சியில் பெயரும், புகழும் ஓங்கும். வருமானம் சீராக இருக்கும்.

மாணவமணிகள் : மனதில் நிலவிய கவலைகளும், சஞ்சலங்களும் நீங்கும். மனம் தெளிவு பெறும். படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : தொழில் மேம்படும். விளைச்சல் பெருகும். வருமானமும் அதிகரிக்கும். பூமி, நிலம், வீடு இவற்றால் ஆதாயங்கள் உண்டு.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் சீராக இருக்கும். என்றபோதிலும் வரவை மிஞ்சும் செலவுகளால் கவலைகள் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண் மணிகளுக்கு அபிவிருத்தி ஏற்படும்.

அறிவுரை : உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்துவாருங்கள்.

நீ நாளும் நன்நெஞ்சே! நினைகண்டாய் யார் அறிவார்!
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூநாளும் தலை சுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்று ஏத்த பெறலாமே நல்வினையே.

- சம்பந்தர்

அனுகூல தினங்கள் : பிப் : 19, 20, 21, 25
பிரதிகூல தினங்கள் : பிப் : 22, 23, 24
அதிர்ஷ்ட எண்கள் : 5, 7
 
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் சுக்கிரன்; குடும்ப ஸ்தானத்தில் குரு; தைரிய ஸ்தானத்தில் கேது; ருண ஸ்தானத்தில் செவ்வாய்; அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ); பாக்கிய  ஸ்தானத்தில் ராகு; லாப ஸ்தானத்தில் சந்திரன்; விரய ஸ்தானத்தில் சூரியன், புதன். ஷென்ம ராசியான மீனத்தில் சுக்கிரன் உச்சமடைந்திருப்பது நல்லதே. பெண்களால் ந ன்மைகள் உண்டாகும். தொழிலில் முன்னேற்றமும், வருமானப் பெருக்கமும் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எட்டில் சனி. நன்மை தராது. உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும். வேலை காரணமாக பயணங்களும், அதனால் அலைச்சலும், உடற்சோர்வும் ஏற்படக்கூடும். இதனால் ஆதாயம் எதுவும் ஏற்பட  வாய்ப்பில்லை. பண விஜயத்தில் எச்சரிக்கை தேவை. 12-ல் சூரியன். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். விரக்தி மனப்பான்மை ஏற்படும்.

உத்தியோகம் : பணியிடத்தில் சிரமங்கள் நீடிக்கும். உயரதிகாரிகள் உங்களைச் சங்கடத்திற்கு உள்ளாக்கக்கூடும். எனவே எதிலும் நிதானம் தேவை.

தொழில் : தொழிலதிபர்களுக்கும் சிரமங்கள் எழக்கூடும். என்றாலும் தொழிலில் பாதிப்பு எதுவும் இராது. உற்பத்தியும், வருமானமும் பாதிக்கப்படும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் சீராக இருக்கும். வரவேண்டிய பணம் தாமதப்படும். கொடுக்கல்-வாங்கல் சிரமம் தரும்.

கலைத்துறையினர் : சினிமா, சின்னத்திரை கலைஞர்கள் ஆதாயம் பெறுவார்கள். வாய்ப்புகள் தேடிவரும். வருமானமும், வசதிகளும் கூடும்.

அரசியல்துறையினர் : கட்சியில் ஏற்படும் குழப்பங்கள் உங்கள் நிலைமையையும் பாதிக்கும். செலவுகளும் மிகவும் அதிகமாகலாம். எனவே பொறுமை தேவை.

மாணவமணிகள் : குழப்பங்கள் நீங்கும். மனம் அமைதி பெறும். அறிவு தெளிவாகும். படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : விளைச்சல் நல்லபடி இருக்கும். வருமானம் உயரும். பூமி, நிலம், வீடு ஆதாயம் தரும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் நன்றாக இருக்கும். என்றாலும் செலவுகள் உங்கள் வரவையும்விட அதிகமாகலாம். இதனால் கவலைகள் அதிகரிக்கும். வேலைக்குச்  சென்றுவரும் பெண்மணிகளுக்கு சிரமங்கள் ஏற்படும்.

அறிவுரை : எதைச் செய்தாலும் அவசரப்படாதீர்கள். பொறுமையுடன் சிந்தித்துச் செயல்படுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

மிக்கான், மறையாய் விரிந்த விளக்கை, என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை,
தக்கானை கடிகை தடங்குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உயந்து போனேனே.        

- திருமங்கையாழ்வார்

அனுகூல தினங்கள் : பிப் : 22, 23, 24, 25
பிரதிகூல தினங்கள் : பிப் : 19, 20, 21
அதிர்ஷ்ட எண்கள் : 3, 9

ஹைதி அதிபர் மார்டெல்லி மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு. - Thedipaar.com